கனமழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கும் வடக்கு!!
நேற்று நள்ளிரவு தொடக்கம் பெய்துவரும் கனமழை காரணமாக வடக்கில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. குறிப்பாக யாழ்.மாவட்டம் நகர் பிரதேசங்களில் வெள்ளநீர் தேங்கி நிற்பதை அவதானிக்க முடிகிறது.
இதனால் யாழ்ப்பாணத்தில் பிரதான போக்குவரத்து வீதிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் பல குடும்பங்கள் தங்களின் குடியிருப்புக்களை விட்டு வெளியேறியுள்ளன.
மேலும் 24 மணிநேரம் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் மக்களை எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் வளிமண்டவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும்,
வடக்கு மாகாணத்தில் நேற்று நள்ளிரவு தொடக்கம் பெய்துவரும் கன மழையானது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக யாழ் மாவட்டத்தில் ஸ்டாலின் வீதி மூடப்பட்டுள்ளதுடன் கடைகள் மற்றும் வீடுகளிற்குள் வெள்ளம் புகுந்துள்ளது.
மழை மற்றும் கடும் காற்று காரணமாக வடமராட்சி பிரதேசத்தில் கடற்கரை அண்டி கோடிக்கணக்கான கடல் வாழை கரை ஒதுங்கியுள்ளது.
இந்த கனமழை காரணமாக பாடசாலைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளது மட்டுமல்லாது வைத்தியாசாலை நேயளார் பிரிவுகளும் பாதிப்படைந்துள்ளது மற்றும் இலங்கையை சேர்ந்த படகு 13 பேருடன் மாலை தீவில் கரை ஒதுங்கியுள்ளது குறிப்பிடதக்கது.