ரஸ்யாவில் 146 ஆண்டுகளில் இல்லாத அளவில் கடும் பனி மழை பொழிந்துள்ளது.கடந்த சில நாட்களாக பெய்து வரும் பனியால் பல இடங்களில் பனியின் உயரம் பல மீட்டர்களை எட்டியுள்ளது
தலைநகரம் மாஸ்க்கோ மற்றும் பல நகரங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது
குறிப்பாக ரஸ்யாவின் கம்சட்கா தீபகட்பம் பனிப்பொழிவால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது.அங்கு பனிக்குவியல்கள் 10 முதல் 40 அடி வரையும் உயர்ந்துள்ளன .

உயரமான கட்டடங்களில் 4வது மாடி வரை பனியாள் சூழப்பட்டுள்ளது சாலைகளில் மலை போல பனி குவியலாக உள்ளதனால் வாகன போக்குவரத்துக்கு பெரும் இன்னல்கள் ஏற்ப்பட்டுள்ளன . மோசமான வானிலை காரணமாக ஸகாலின் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது மற்றும் பல விமான நிலையங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன., மற்றும் அங்கு பலத்த பனி பொலிவினால் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது மற்றும் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது
இராட்ஷதை இயந்திரங்கள் கொண்டு பனியினை அகற்றும் பணிகள் இடம்பெற்று வருகின்றது
