அத்தியாவசிய உணவுப்பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு!!
நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலையை குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த விலை குறைப்பானது இன்று (09/12/2022) முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது.
இதன்படி,
ஒரு கிலோ கிராம் கீரி சம்பா அரிசியின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன்,
பெரிய வெங்காயத்தின் விலை 16 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,
425 கிராம் டின் மீன் டின் ஒன்றின் விலை 35 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில்,
விலை குறைப்பிற்கமைய ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசியின் புதிய விலை 215 ரூபாவாகவும்,
ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் புதிய விலை 199 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன்,
425 கிராம் மீன் டின் ஒன்றின் புதிய விலை 495 ரூபாவாக காணப்படுகின்றது.