திறக்கப்படவுள்ள பாடசாலைகள்?? – கல்விஅமைச்சர் வெளியிட்ட தகவல்!!
ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை வெளிக்கள ஊழியர்களில் 83 சதவீதமானோருக்கு கொரோனா தடுப்பூசி முதல்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட தடுப்பூசி இம்மாத இறுதி வாரத்தில் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரீஸ் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் பாடசாலைகளை விரைவாக திறந்து கல்வி நடவடிக்களைத் தொடங்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிடடார்.