அரிசி விலையில் வீழ்ச்சி…. நாடு மகிழ்ச்சியில்!!
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ அரிசியின் மொத்த விலை 20 ரூபாவினால் குறைந்துள்ளதாக அரிசி இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொன்னி சம்பா அரிசியின் மொத்த விலை கிலோ ஒன்று ரூ.120 ஆகவும், நாட்டு அரிசியின் மொத்த விலை கிலோ ரூ.110 ஆகவும், வெள்ளை பச்சை அரிசியின் மொத்த விலை கிலோ ரூ.98 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நாட்டு அரிசி மெட்ரிக் தொன் ஒன்றின் விலை 400 டொலராகவும், வெள்ளை பச்சை மெட்ரிக் தொன் ஒன்றின் விலை 390 டொலராகவும் குறைவடைந்தே அரிசி விலை வீழ்ச்சிக்கு காரணம்.
அரிசி இறக்குமதி தொடரும் என்றும், போதிய அளவு கையிருப்பு இருப்பதாகவும் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.