ரஷ்யாவின் நான்கு உலங்குவானூர்திகள், விமானம் மற்றும் க்ரூஸ் ஏவுகணை உக்ரைன் படைகளால் சுட்டு வீழ்த்தல்!!
ரஷ்யாவிற்கு சொந்தமான நான்கு உலங்குவானூர்திகள், ஒரு விமானம் மற்றும் ஒரு க்ரூஸ் ஏவுகணை என்பன உக்ரைன் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
உக்ரைன் ரஷ்யப் போர் தொடர்ந்தும் உக்கிரமடைந்துவரும் நிலையில்,
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் எதிர்வரும் மே மாதத்தில் நிறைவுபெற்று விடும் என்று எதிர்பார்ப்பதாக உக்ரைனிய அரசாங்க ஆலோசகர் ஒலெக்சி ஆரேஸ்டோவிச் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா தனது அண்டை நாடுகளைத் தாக்குவதற்கான மூலவளங்கள் இல்லாத நிலையில்
மே மாத ஆரம்பத்தில் போர் முடிந்துவிடும் என்று தான் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்பின்னர் மே மாதத்தின் பிற்பகுதியில் ஒரு சமாதான உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளமுடியும் என்று தாம் நினைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,
நான்கு ரஷ்ய உலங்கு வானுார்திகளை தாம் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ஆயுதப்படை தெரிவித்துள்ளது.
ரஷ்யாவிற்கு சொந்தமான நான்கு உலங்கு வானூர்திகள், ஒரு விமானம் மற்றும் ஒரு க்ரூஸ் ஏவுகணை என்பன உக்ரைன் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டன.
உக்ரைனிய படைகளால் தெற்கு துறைமுக நகரமான மரியுபோலைக் கைப்பற்றுவதற்கான ரஷ்யாவின் முயற்சிகளைத் தடுக்க முடிந்துள்ளது.
சில இடங்களில் ரஷ்ய படைவீரர்கள், படைத்தலைமைகளின் கட்டளைகளை நிறைவேற்ற மறுக்கிறார்கள் என்றும் உக்ரைன் ஆயுதப்படை தெரிவித்துள்ளது.
இதேவேளை,
தலைநகர் கீவ்வில் அமைந்துள்ள குடியிருப்புகள் மீது ரஷ்ய படையினரின் தாக்குதல்கள் தொடர்பில் உக்ரைன் படைத்தரப்பு இன்று காணொளிகளை வெளியிட்டுள்ளது.