மகப்பேறு மற்றும் குழந்தைகள் வைத்தியசாலை மீது ரஷ்யா மூர்க்கத்தனமான விமானத் தாக்குதல்(பதறவைக்கும் காணொளி)!!
உக்ரைனின் தென் பிராந்தியத்தில் உள்ள மரியுபோல் நகரில் உள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் வைத்தியசாலை மீது ரஷ்யா விமானத் தாக்குதலை நடத்தியுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
வைத்தியசாலை வளாகம் மீதான இந்த தாக்குதலானது யுத்தக் குற்றமென உக்ரைன் அதிபர் வெலெடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அதேவேளை,
மிகப் பெரிய அழிவு ஏற்பட்டுள்ளதாக மரியுபோல் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மரியுபோலில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மற்றும் மகப்பேறு வைத்தியசாலை மீதான தாக்குதலுக்கு கண்டனம் வெளியிட்ட ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்,
இந்த இரத்தக்களரியை முடிவுக்கு கொண்டு வருமாறு வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் காணொளிகளை பார்வையிட இங்கே…..
உக்ரைனின் மரியுபோல் நகரில் ரஷ்யாவின் தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்படும் வைத்தியசாலையின் சேதமடைந்த காட்சிகளை உக்ரைன் அதிபர் வெளியிட்டுள்ளார்.
இந்த தாக்குதலில் ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் உட்பட குறைந்தது 17 பேர் காயமடைந்துள்ளதாக பிராந்திய அதிகாரி உக்ரேனிய ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இந்த தாக்குதலில் மரணங்கள் ஏற்பட்டமை தொடர்பிலோ குழந்தைகள் காயமடைந்தமை தொடர்பிலோ தகவல்கள் எதுவும் உறுதி செய்யப்படவில்லை.
ரஷ்ய தரப்புடன் ஒப்புக் கொள்ளப்பட்ட போர் நிறுத்தத்தின் போது இந்த தாக்குதல் நடந்ததாக மரியுபோல் துறைமுக நகரத்தை உள்ளடக்கிய டொனெட்ஸ்க் பிராந்திய நிர்வாகத்தின் தலைவரான பாவ்லோ கைரிலென்கோ தெரிவித்துள்ளார்.
அத்துடன்,
உக்ரைனின் தென் கிழக்கு பிராந்தியத்தின் உள்ள கார்கிவ் நகருக்கு அருகில் மக்கள் வசிக்கும் கட்டடம் மீது ரஷ்யா மேற்கொண்ட எறிகணை தாக்குதலில் 02 சிறுவர்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாக உக்ரைனின் அரச அவசர சேவைகள் பிரிவு கூறியுள்ளது.