உக்ரைன் – ரஷியா போர் கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வருகிறது .இதில் உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகளில் ஆயுதம் சப்ளை ,பொருளாதார உதவி வளங்குகின்றன. அதேபோல் ரஷ்யவுக்கு அதன் நட்பு நாடான வடகொரியா சுமார் ஆயிரம் வீரர்களை அனுப்பியது .
ஆனால் மிக பரந்த நிலப்பரப்பை கொண்டுள்ள ரஷ்யாவுக்கு அதன் எல்லையை பதுகாக்கும் அளவுக்கு போதுமான வீரர்கள் இல்லை .எனவே படிப்பு ,வேலை நிமித்தம் அங்கு செல்லும் வெளிந்தடைவரை போரில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்துவதற்க்காக குற்றச்சாட்டு உள்ளது . இந்நிலையில் அங்குள்ள வெளிநாட்டினரை குறிவைத்து சமூக வலாத்தலம் மூலம் அரசாங்கம் விளம்பரம் அனுப்புகின்றது.
இதில் ராணுவத்தில் இணையும் வெளிநாட்டவருக்கு ரஷ்ய குடியுரிமை ,சுமார் ரூ.2 1/2லட்சம் சம்பளம் மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் எனா கூறப் பட்டுள்ள்ளது .இதன் மூலம் தற்போது ஆள்சேர்ப்பை ரஷ்ய ராணுவம் விரைவுபடுத்தி உள்ளது. ஆனால் இது ஒரு ஏமாற்று வேலை எனவும் பல தரப்பினரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
