சாந்திரபுர கடற்கரையில் கைப்பற்றப்பட்டது 1000KG வெடிபொருட்கள்!!
மன்னாரில் 1000 கிலோ சட்ட விரோதமான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மன்னார் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை மன்னார், சாந்திரபுர கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விஷேட சோதனையின் போது வோட்டர் ஜெல் (Water Gel) எனும் வெடிபொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
54 மற்றும் 57 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெடிபொருட்கள் மன்னாரில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
இவர்களிடம் இருந்து 998.750 கிலோ எடையுள்ள 7,990 வாட்டர் ஜெல் குச்சிகள் கைப்பற்றப்பட்டன” என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்