சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த “டேவிட் வோர்னர்”!!

உலகக்கோப்பை தொடரின் இன்றைய (08) போட்டியில் இந்தியா – அவுஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றன. சென்னையில் தொடங்கிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா துடுப்பாட்டத்தை துவங்கியது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் உலகக்கோப்பை சாதனையை டேவிட் வார்னர் தகர்த்துள்ளார்.

மிட்செல் மார்ஷ் ரன் எடுக்காமல் வெளியேற, ஸ்டீவன் ஸ்மித் களமிறங்கி வார்னருடன் இணைந்து விளையாடினார். இந்தப் போட்டியில் டேவிட் வார்னர் 2வது பவுண்டரியை விரட்டியபோது புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

அவர் உலகக்கோப்பையில் அதிவேகமாக 1,000 ஓட்டங்கள் குவித்துள்ளார். இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் இருவரும் 20 இன்னிங்ஸ்களில் எடுத்த ஸ்கோரை, வார்னர் 19 இன்னிங்ஸ்களிலேயே எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அத்துடன் உலகக்கோப்பையில் அதிக ஓட்டங்கள் எடுத்த அவுஸ்திரேலிய வீரர்கள் பட்டியலில், டேவிட் வார்னர் 4வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.

முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் (1,743), ஆடம் கில்கிறிஸ்ட் (1,085), மார்க் வாக் (1,004) ஆகியோர் உலகக்கோப்பையில் 1000 ஓட்டங்களை கடந்த அவுஸ்திரேலிய வீரர்கள் ஆவர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *