சடலமாக மீட்கப்பட்ட 17 வயது தமிழ் மாணவி….. இன்று அதிகாலையில் சம்பவம்!!
கொழும்பில் தூக்கில் தொங்கிய நிலையில் தமிழ் மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று (17/06/2023) அதிகாலை பதிவாகியுள்ளது.
பொரளையில் வசித்து வரும் 17 வயதுடைய சண்முகம் வளர்மதி என்ற மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரியவருகிறது.
வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலம் இவர் அண்மையில் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையில் தோற்றியிருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் சடலம் பிரேத பரிசோதனைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும்,
மாணவியின் மரணத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.