சடுதியாக குறைவடையவுள்ள எரிவாயு விலை….. வெளியாகிய அறிவிப்பு!!
12.5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 400 ரூபா அளவில் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை (04) நள்ளிரவு முதல் குறித்த விலை திருத்தம் நடைமுறைப்படுத்தபடும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது 12.5 கிலோ லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 3,638 ரூபா என்பது குறிப்பிடத்தக்ககது.
மேலும் விலை குறைப்பு தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் நாளைய தினம் விடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.