சண்டையில் ஈடுபட்ட வீரர்..! இலங்கை கிரிக்கெட் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இலங்கை கிரிக்கெட் வீரர் ஹோட்டலில் மோதலில் ஈடுபட்டதாக அண்மயில் ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இது குறித்து இலங்கை கிரிக்கெட் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் அண்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் போது தேசிய கிரிக்கெட் வீரர் சண்டையில் ஈடுபட்டார் என்று மேற்கோள் காட்டிய சில ஊடக அறிக்கைகளின் உண்மைதன்மையை அறிய விசாரணை தொடங்கியிருப்பதை அறிவிக்க இலங்கை கிரிக்கெட் விரும்புகிறது.
இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாகக் குழு, தேசிய வீரர்களின் ஒழுக்கம் கண்டிப்பாக கண்காணிக்கப்படும் என்றும், ஒழுங்கு அடிப்படையில் தவறான நடத்தை நிரூபிக்கப்பட்டால் எந்தவொரு நபருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வலியுறுத்த விரும்புகிறது.