சர்வதேச போட்டியில் அதிக சிக்சர்கள் – கெயில் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா

புதுடெல்லி: Powered By PauseUnmute Loaded: 0.48% Fullscreen உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. தலைநகர் டெல்லியில் நேற்று நடைபெற்ற 9வது லீக் போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

கேப்டன் ரோகித் சர்மா 84 பந்துகளில் 5 சிக்சர், 16 பவுண்டரி உள்பட 131 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இந்நிலையில், இந்தப் போட்டியில் ரோகித் சர்மா 5 சிக்சர்கள் அடித்ததன் மூலம் சர்வதேச அளவில் 3 வகை கிரிக்கெட்டிலும் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். சர்வதேச போட்டிகளில் 556 சிக்சர்கள் அடித்த ரோகித் சர்மா முதல் இடத்திலும், 553 சிக்சர்கள் அடித்த கிறிஸ் கெய்ல் 2-வது இடத்திலும், 476 சிக்சர்கள் அடித்த அப்ரிடி 3வது இடத்திலும் உள்ளனர்.

இதேபோல், உலக கோப்பையில் குறைந்த பந்துகளில் சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார் ரோகித் சர்மா .

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *