சர்வதேச சந்தையில் அறிமுகமான 2021 கவாசகி மெகுரோ கே3
கவாசகி நிறுவனத்தின் 2021 மெகுரோ கே3 மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
கவாசகி நிறுவனம் மெகுரோ கே3 மோட்டார்சைக்கிளை ஜப்பான் நாட்டு சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மாடல் கவாசகி டபிள்யூ800 மாடலை தழுவி உருவாகி இருக்கிறது. இதன் விற்பனை 2021 பிப்ரவரி மாதத்தில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.
தோற்றத்தில் மெகுரோ கே3 மாடல் டபிள்யூ800 போன்றே காட்சியளிக்கிறது. இந்த மாடல் பியூவல் டேன்க் மற்றும் பக்கவாட்டில் மெகுரோ பேட்ஜிங் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் பியூவல் டேன்க் மீது பின்-ஸ்ட்ரிப் செய்யப்பட்டு இருக்கிறது.
மெகுரோ கே3 மாடலில் 773சிசி பேரலெல் ட்வின் மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 51 பிஹெச்பி பவர், 62.9 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதே என்ஜின் கவாசகி டபிள்யூ800 மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.