சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா திடீர் கொழும்பு பயணம்….. அதே நேரம் புதிய வைத்திய அத்தியட்சகர் நியமனம்!!
யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் இன்று (09.07.2024) கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் (Chavakachcheri Base Hospital) பொறுப்பு வைத்தியர் அர்ச்சுனாவை மாற்றக்கூடாது மற்றும் வைத்தியசாலையின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்குமாறு கோரி நேற்றைய தினம்(08/07/2024) மக்களால் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றிருந்தது.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நிலவி வரும் குழப்பமான நிலையிலேயே அவர் தற்போது புதிய வைத்திய அத்தியட்சகராக நியமனம் பெற்றுள்ளார்.
இருநாள் விடுமுறையில் கொழும்பிற்கு சென்று மீண்டும் வருவேன் என சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் அர்ச்சுனா(Dr Archchuna) மக்களிடம் உறுதியளித்து கொழும்பு சென்றுள்ள நிலையிலேயே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன்,
நான் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராகவே கொழும்பு சென்று வரவுள்ளேன். தற்போதும் சட்டப்படி நானே பதில் வைத்திய அத்தியட்சகர்.
எனவே,
மக்கள் பதற்றமடையவோ, குழப்பமடையவோ தேவையில்லை மீண்டும் வருவேன் என வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.