பாடசாலை மாணவி வன்புணர்வு – 21 பாடசாலை மாணவர்கள் கைது….. சிறுமியை குற்றவியல் பலாத்காரம் செய்த வைத்தியர்!!
பாடசாலை மாணவி வன்புணர்வு – 51 வயதான ஆசிரியர் மற்றும் 49 வயதான பிரதி அதிபர்
பாடசாலை மாணவியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியதாக கூறப்படும் பாடசாலை ஆசிரியர் ஒருவரும், சம்பவத்தை மூடி மறைத்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பாடசாலையின் பிரதி அதிபர் ஒருவரும் மஹவெல காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை அவசர இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மஹவெல காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது..
12 வயது சிறுமி தான் கல்வி கற்கும் பாடசாலையின் ஆசிரியர் ஒருவரால் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த சிறுமி பாடசாலை பிரதி அதிபருக்கு அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
எவ்வாறாயினும்,
சம்பவம் தொடர்பில் யாரிடமும் கூற வேண்டாம் என பிரதி அதிபர் சிறுமியிடம் கூறியுள்ளதாக காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்படி,
சம்பவத்துடன் தொடர்புடைய 51 வயதான ஆசிரியர் மற்றும் 49 வயதான பிரதி அதிபர் ஆகியோர் மஹவெல காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
சிறுமியை குற்றவியல் பலாத்காரம் செய்த வைத்தியர்
தனமல்வில பாடசாலை மாணவி வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான மருத்துவப் பரிசோதனையை மேற்கொண்ட ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்தியர்
சிறுமியை குற்றவியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் நேற்று (17/08/2024) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
எனினும்,
கைது செய்யப்பட்ட சட்ட வைத்தியர் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதன் பின்னர் 300000 ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய 21 பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன்,
சம்பவத்தை மூடி மறைத்த குற்றச்சாட்டில் மாணவி கல்வி கற்கும் பாடசாலை அதிபர் உட்பட நான்கு ஆசிரியர்கள் முன்னதாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை,
தனமல்வில பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரை வன்புணர்விற்கு உட்படுத்தியதாக மாணவர்கள் மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரிய ஆலோசகர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.