கல்விச் செயற்பாடுகள் ஆரம்பம்? கல்வியமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிவிப்பு!!
நாட்டில் அதிகரித்துள்ள கொரோனான தொற்று காரணமாக பாடசாலைச் செயற்பாடுகள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் 4 கட்டங்களாக பாடசாலைகளில் கல்விச் செயற்பாடு ஆரம்பிக்கப்படவுள்ளதாக சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுவரும் தகவல் பொய்யானது என கல்வியமைச்சின் செயலாளர், பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
தற்போது அதிகரித்துள்ள கொரோனா பரவல் நிலைமைக்கு மத்தியில், பாடசாலைகளை மீள திறப்பது குறித்து இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.