சாதாரண மற்றும் உயர்தர கல்வி செயற்பாட்டிற்காக பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் புதிய செய்தி!!
நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளின் சாதாரண தர மற்றும் உயர்தரங்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் நாளை மறுதினம் முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
10,11,12 மற்றும் 13 ஆம் தரங்களுக்கான கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு கொவிட்-19 தடுப்பு செயலணி பரிந்துரைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, 6 – 9 ஆம் தரங்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது, பரீட்சை நடவடிக்கைகளை முன்னெடுப்பது உள்ளிட்ட காரணிகள் தொடர்பில் தொடர்ந்தும் அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றது.
இதேவேளை,
சாதாரண தரம் மற்றும் உயர்தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்களை 50 சதவீத கொள்ளளவில் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.