பாடசாலைகள் திறப்பது எப்போது? சற்றுமுன் வெளிவந்த தகவல் !!
நாட்டில் தற்போது காணப்படுகின்ற அசாதாரண நிலைமையினால், பாடசாலைகளை மீள ஆரம்பிக்கின்றமை குறித்து, இதுவரை இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்துக கொண்டே செல்கின்றது. எனினும் இம்மாதம் 29ஆம் திகதி பாடசாலைகளை திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கிய பின்னரே பாடசாலைகள் திறப்பது குறித்து தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலர் கபில பெரேரா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.