200 க்கும் குறைவான மாணவர்களின் எண்ணிக்கை கொண்ட பாடசாலைகளை அடுத்த மாதத்தில் மீண்டும் திறக்க முடியும்….. நிபுணர் குழுவின் பரிந்துரை!!
200 க்கும் குறைவான மாணவர்களின் எண்ணிக்கை கொண்ட பாடசாலைகளை அடுத்த மாதத்தில் மீண்டும் திறக்க முடியும் என நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
கொரோனா தடுப்பு செயலணியுடன் இணைந்த இந்தக் குழுவால் எட்டப்பட்ட பரிந்துரைகள் செப்டம்பர் 17 ஆம் திகதி ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட கிராமப்புறங்களில் உள்ள சுமார் 3,000 பாடசாலைகளை ஆரம்பத்தில் மீண்டும் திறக்க முடியும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், குறித்த பாடசாலைகளை ஒரு முறையான திட்டத்தின் கீழ் திறக்க வேண்டும் என்றும் சுகாதார அமைச்சருக்கு வழங்கிய பரிந்துரையில் குறித்த சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
12- தொடக்கம் 18 வரையான வயதுடைய மாணவர்களுக்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரையின்படி பைசர் தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்ற பரிந்துரையும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கதினால் முன்வைக்கப்பட்டது.
அதன்படி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக ஒக்டோபர் மாதத்தில் இலங்கைக்கு பைசர் தடுப்பூசியின் 4 மில்லியன் டோஸ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.