எதிர்வரும் திங்கள் முதல் பழையபடி பாடசாலைகள் நடைபெறும்!!
எதிர்வரும் திங்கட்கிழமை (10) முதல் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று முன்னெடுக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்காக அனைத்து மாணவர்களையும் ஒரே தடவையில் பாடசாலைக்கு வரவழைப்பதற்கான சுகாதார வழிகாட்டல்களை வௌியிடவுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,
12 முதல் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (07) முதல் ஆரம்பிக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு ஒரு தடுப்பூசியை மாத்திரம் வழங்கவும் சுகாதார அமைச்சு பரிந்துரைத்துள்ளது.