இரண்டாவது தடுப்பூசியாக Pfizer ஏற்றும் நடவடிக்கை இடைநிறுத்தம்!!
முதலாவதாக AstraZeneca தடுப்பூசி ஏற்றப்பட்டவர்களுக்கு இரண்டாவதாக Pfizer தடுப்பூசியை ஏற்றும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
நாட்டிற்கு தேவையான AstraZeneca தடுப்பூசிகளை இம்மாத இறுதிக்குள் வழங்குவதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளதாக அவர் கூறினார்.
குறித்த தொகை தடுப்பூசி கிடைக்கப்பெற்றதும் முதலாவதாக AstraZeneca தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.