சிறுத்தை புலியின் உடலம் தோட்ட தேயிலை மலையில் இருந்து மீட்பு!!
புளியாவத்தை பிலிங்பொனி தோட்ட தேயிலை மலையில் இருந்து சிறுத்தை புலியின் உடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று மாலை வேலையில் ஆறுவயது மதிக்கதக்க சிறுத்தை புலியின் உடலம் மீட்கப்பட்டதாக நோர்வூட் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த தேயிலை மலையில் தொழில்புரிந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் குறித்த சிறுத்தை புலியினை இனங்கண்டுள்ளனர்.
தொழிலாளர்கள் நோர்வூட் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற நோர்வூட் காவல்துறையினர் நல்லதன்னி வனவிலங்கு காரியாலய அதிகாரிகளுக்கு தகவல் வழங்கினர்.
சம்பவ இடததிற்கு வருகை தந்த வனவிலங்கு அதிகாரிகள் விசாரனைகளை மேற்கொண்ட போது சடலமாக மீட்கப்பட்ட சிறுத்தை புலியின் உடல்பகுதியில் காயங்கள் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
குறித்த சிறுத்தை புலி மற்றுமொரு சிறுத்தை புலியோடு சண்டை பிடித்ததன் காரமாகவே காயங்கள் ஏற்பட்டிருக்காலம் என வனவிலங்கு அதிகாரிகளின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேலை குறித்த சிறுத்தை புலியின் சடலம் பிரேத பரீசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக நல்லதன்னி விலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.