7 வருடங்களாக தொடரும் தோல்வி பயணம் – கவலையில் மூழ்கிய இந்திய அணி ரசிகர்கள்!!
கடந்த 7 வருடங்களில் இந்திய அணி ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை.
இங்கிலாந்து சௌதாம்ப்டானில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது.
ஐசிசி தொடர்களில் இறுதிப் போட்டிவரை சென்று தோல்வியைச் சந்திக்கும் இந்திய அணியின் இந்த பயணம் 7 வருடங்களாக தொடர்ந்து தான் வருகிறது.
6ஆவது நாள் வரை நீடித்த இறுதிப் போட்டியில், இந்திய அணி பேட்ஸ்மேன்கள் சொதப்பியதாலும், பும்ராவின் பந்து எடுபடாமல் போனது காரணமாகவும் புளு ஆர்மி தோல்வியை சந்தித்துள்ளது.
கடந்த 7 வருடங்களாக இறுதிப் போட்டி அல்லது அரையிறுதிப் போட்டிவரை முன்னேறும் இந்திய அணி அதில் தோல்விகளைச் சந்தித்து, ஒருமுறைகூட கோப்பை வெல்லாமல் இருந்து வருகிறது.
2014ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், தோனி தலைமையிலான இந்திய அணி இலங்கையிடம் தோற்று கோப்பையைத் தவறவிட்டது.
அதன்பிறகு, 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் வெற்றியைப் பறிகொடுத்தது.
2016ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் மேற்கிந்தியத் தீவுகளிடமும், 2017ஆம் ஆண்டு சாம்பியன்ஷிப் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடமும் இந்திய அணி தோற்றது.
கடைசியாக 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்திடம் இந்திய அணி தோற்றது.
தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வியை எதிர்கொண்டுள்ளது. இத்துயரத்தைப் போக்க இந்த வருடத்திலேயே இந்தியாவுக்கு மற்றொரு வாய்ப்பும் இருக்கிறது.
இந்த வருடம் அக்டோபர் மாதத்தில் டி20 உலகக் கோப்பை நடக்கவுள்ளது. அதில் வெற்றிபெறும் பட்சத்தில் கேப்டன் விராட் கோலி, தன் மீதுள்ள விமர்சனத்தை நிச்சயம் துடைத்தெறிய முடியும்.
ஆனால் வெற்றி வாய்ப்பு யாருக்கு இருக்கும் என அக்டோபர் மாதமே தெரிந்துகொள்ள முடியும்.
தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வியை எதிர்கொண்டுள்ளது. இத்துயரத்தைப் போக்க இந்த வருடத்திலேயே இந்தியாவுக்கு மற்றொரு வாய்ப்பும் இருக்கிறது.
இந்த வருடம் அக்டோபர் மாதத்தில் டி20 உலகக் கோப்பை நடக்கவுள்ளது. அதில் வெற்றிபெறும் பட்சத்தில் கேப்டன் விராட் கோலி, தன் மீதுள்ள விமர்சனத்தை நிச்சயம் துடைத்தெறிய முடியும்.
ஆனால் வெற்றி வாய்ப்பு யாருக்கு இருக்கும் என அக்டோபர் மாதமே தெரிந்துகொள்ள முடியும்