ஷாலினி அஜித் குமார் வெளியிட்ட வைரல் பதிவு!!
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் “விடா முயற்சி” படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் முதற்கட்ட படபிடிப்பு அஜர்பைஜானில் நடந்தது.
படப்பிடிப்பு முடிவடைந்து அவர் சென்னை திரும்பினார்.
அஜித் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு முன் முழு உடல் பரிசோதனை செய்வது வழக்கம்.
அந்த வகையில்,
கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மார்ச் 8 ஆம் தேதி சிகிச்சை முடித்து வீடு திரும்பினார் அஜித்.
அடுத்தநாள் அவர் மகன் ஆத்விக்கின் பள்ளி கூடத்தில் கால்பந்து விளையாடுவதை பார்க்க வந்து இருந்தார்.
அவர் மைதானத்தில் உட்கார்ந்து விளையாட்டை பார்க்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில்,
ஷாலினி அஜித்குமார் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அதில் அஜித் குமார் அவர் மகனான ஆத்விக்கிற்கு ஷூ கடையில் அமர்ந்து ஷூ மாட்டி விடுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
‘உங்களால் ஜெயிக்க முடியாது‘ என்று நம்மிடம் சொல்லக்கூடிய ஒரே ஒருவர் அது நாம் தான் ” என்ற தலைப்பில் பதிவினை வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram