குறும்படம் மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடிகை தன்யா!!
விஜய்சேதுபதி ஜோடியாக கருப்பன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை தன்யா, தற்போது கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தில் நடித்துள்ளார்.
நடிகர் நடிகைகள் சமூக வலைத்தளத்தில் கொரோனா பரவலை தடுக்க முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், தடுப்பூசி போடுதல் போன்றவற்றை வலியுறுத்தி பதிவுகள் வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
தடுப்பூசி போடும் புகைப்படங்களை பகிர்ந்து நாங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டோம் நீங்கள் போட்டு கொண்டீர்களா? என்ற பதிவுகள் வெளியிட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் விஜய்சேதுபதி ஜோடியாக கருப்பன், சசிகுமார் ஜோடியாக பலே வெள்ளையத்தேவா, அருள் நிதியுடன் பிருந்தாவனம் படங்களில் நடித்துள்ள தன்யா ரவிச்சந்திரன் குறும்படம் மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறார்.
இந்த படத்தை கட்டில் பட இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு இயக்கி உள்ளார்.
ஏழைகளுக்கு உதவும் வகையில் முதல் அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சை அளிக்கப்படுவது குறித்தும் குறும்படத்தில் விளக்கி உள்ளார்.