“பயில்வான் ரங்கநாதன்” மீது ‘பாடகி சுசித்ரா’ அவதூறு புகார்!!
தமிழ் சினிமாவின் பிரபலமான காமெடி நடிகரான பயில்வான் ரங்கநாதன்.
சமீப காலமாக சினிமா பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை பகிரங்கமாக மீடியாவில் பதிவிட்டு விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார்.
இவர்,
அந்த காலக்கட்டத்தில் இருந்தே சினிமாவில் உள்ளதால் சினிமா நட்சத்திரங்களை பற்றிய பல அறியாத ரகசியங்கள் நடந்திருப்பதாக தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார்.
அந்த வகையில்,
சமீப நாட்களுக்கு முன்பு தனுஷின் விவாகரத்து விடயத்தினை குறித்து பயில்வான் பேசிய போது பாடகி சுசித்ராவைக் குறித்தும் அவதூறாக பேசியுள்ளார்.
இதற்கு பாடகியான சுசித்ரா தன்னை பற்றி தவறாக பேசிய பயில்வான் ரங்கசாமியை போன் செய்து வெளுத்து வாங்கி இருக்கிறார்.
இந்நிலையில்,
தற்போது சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சுசித்ரா புகார் ஒன்று அளித்துள்ளார்.
அந்தப் புகாரில்,
தன் மீது நடிகர் பயில்வான் ரங்கநாதன் எந்த வித ஆதாரமுமின்றி அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.
என் மீது வேண்டுமென்றே அவதூறாக கருத்துகளை சுமத்தி என் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளார்.
இதனால்,
எனக்கு பாடல் பாடும் வாய்ப்பு குறைந்து வருகிறது.
எனவே,
என்னை பற்றி உண்மைக்கு புறம்பாக அவதூறான கருத்துக்களை தொடர்ந்து பேசி வரும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருக்கிறார்.
இதனால்,
பயில்வான் ரங்கநாதன் கைது ஆகுவாரா இல்லையா என கோலிவுட் வட்டாரமே பரபரப்பில் உள்ளது.