ஒரு அப்பிள் பழத்தின் எடையைக் கொண்ட உலகின் மிகச்சிறிய குழந்தை!!
உலகில் பிறந்த மிகச் சிறிய குழந்தை என நம்பப்படும் குழந்தை சிங்கப்பூர் மருத்துவ மனை ஒன்றில் 13 மாத அவசர சிகிச்சை பிரிவில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
க்வெக் யு சுவான் என்ற அந்தப் பெண் குழந்தை பிறக்கும்போது ஒரு அப்பிள் பழத்தின் அளவான 212 கிராம் எடை உடையதாக இருந்தது.
அந்தக் குழந்தையின் உயரம் 24 சென்டிமீற்றர் மாத்திரமாக இருந்தது.
25 வாரத்திற்கு குறைவான காலத்திலேயே அந்த குழந்தை பிரசவிக்கப்பட்டது.
இதற்கு முன்னர் இந்த சாதனை அமெரிக்க பெண் குழந்தை ஒன்றிடமே இருந்தது. 2018 ஆம் ஆண்டு அந்தக் குழுந்தை பிறக்கும்போது 245 கிராம் எடை மாத்திரமே இருந்தது. .
யு சுவான் தற்போது ஆரோக்கியமான 6.3 கிலோகிராம் எடையைக் கொண்டுள்ளது. அந்தக் குழுந்தை பிறக்கும்போது உயிர் தப்புவதற்கு குறைவான வாய்ப்பே இருந்ததாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை குறிப்பிட்டுள்ளது.
மருத்துவமனையில் இருந்த காலத்தில் அந்த குழந்தையை பிழைக்கவைக்க பல இயந்திரங்களின் உதவி பெறப்பட்டதோடு சிறுநீரக சிகிச்சையும் வழங்கப்பட்டதாக அந்த மருத்துவமனை குறிப்பிட்டது.