வெளியாகிய 24 மனத்தியாலத்திற்குள் 2.5 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை!!
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டான்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘ஜலபுலஜங்கு’ பாடல் வெளியாகி பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.
சி.பி. சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரித்து, நடித்திருக்கும் திரைப்படம் ‘டான்’. இப்படத்தில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, சூரி ஆகியோரும் நடித்துள்ளனர்.
கல்லூரி வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘ஜலபுலஜங்கு’ பாடல் வெளியாகி ஒரு மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.
பாடலை இங்கே செய்வதன் மூலம் பார்வையிடுங்கள்
இப்பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரோகேஷ் இப்பாடல் வரிகளை எழுதியுள்ளார். இப்படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.