நேருக்கு நேர் மோதிய இ.போ.சபை மற்றும் தனியார் பேருந்துகள்!!
பாணந்துறை (Panadura) பேருந்து நிலையத்திற்கு அருகில் தனியார் பேருந்தும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இ.போ.ச பேருந்தில் பயணித்த நடத்துனர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று (02/06/2024) காலை இடம்பெற்றுள்ளதுடன், மேலும் நான்கு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் பாணந்துறை டிப்போவில் கடமையாற்றும் நடத்துனர் என தெரியவந்துள்ளது.
இ.போ.சபை பேருந்து பாணந்துறை பேருந்து நிலையத்தை நோக்கி திரும்ப முற்பட்ட போது கொழும்பில்(Colombo to Paanandura) இருந்து பாணந்துறை நோக்கி பயணித்த தனியார் பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தை அடுத்து தனியார் பேருந்தின் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை காவல்துறை ஆரம்பித்துள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.