ஒன்றுடன் ஒன்று மோதிய இ.போ.ச பேருந்துகள்….. பல்வேறு காயங்களுடன் பலர் வைத்தியசாலையில்!!
கொழும்பு – குருநாகல் பிரதான வீதியின் மெட்டிக்கும்புர அருகே இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து இன்று (12/12/2022) அதிகாலை 04.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து மற்றைய பேருந்தை முந்திச் செல்ல முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அனுராதபுரம் பேருந்து டிப்போவுக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்து சபையின்
இரண்டு பேரூந்துகளே இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாக தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் பின்னால் வந்த பேருந்து நடத்துனர் மற்றும் முன் இருக்கையில் இருந்த பயணித்த இருவர் என 3 பேர் காயமடைந்துள்ளனர்.
அவர்கள் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்கஹவெல காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.