அரச பேருந்து – மோட்டார் சைக்கிள் மோதல்….. ஒருவர் பலி!!
யாழிலிருந்து வவுனியா நோக்கி சென்ற அரச பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்துச் சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும்,
யாழிலிருந்து வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து, கிளிநொச்சி இயக்கச்சி வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது இயக்கச்சியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்திற்கு திரும்ப முற்பட்ட மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.
குறித்த பெண் உடுத்துறை வடக்கு தாளையாடியை சேர்ந்த ஞானசீலன் தவமலர் வயது 60 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரின் சடலம் பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துத் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.