சூரியின் கொரோனா தடுப்பூசி அனுபவம்!!!!
சில தினங்களுக்கு முன்பு மனைவியுடன் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகர் சூரி, அதன்பின் ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, பிரபலங்கள் பலர் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் புகைப்படங்களைப் பகிர்ந்து, தங்கள் ரசிகர்களையும் சமூக ஊடகப் பின்தொடர்பவர்களையும் தடுப்பூசி போட ஊக்குவித்து வருகிறார்கள். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்னர், தான் தடுப்பூசி போட்டுக் கொண்ட வீடியோவை நடிகர் சூரி பகிர்ந்துக் கொண்டார்.
இந்நிலையில், “நானும் என் மனைவியும் கொரோனா தடுப்பூசிபோட்டு ஆறு நாளாச்சு, எனக்கு மட்டும் இரண்டு நாள் உடல் சோர்வும், ஊசி குத்தின இடத்துல வலியும் இருந்துச்சு, இப்ப நானும் நார்மலாகிட்டேன். எல்லாரும் அவசியம் தடுப்பூசி போட்டுக்குங்க- உங்களுக்காக, உங்க குடும்பத்துக்காக, நாட்டுக்காக” என பதிவு செய்திருக்கிறார்.
நானும் என் மனைவியும் கொரோனா தடுப்பூசிபோட்டு ஆறு நாளாச்சு; எனக்கு மட்டும் இரண்டு நாள் உடல்சோர்வும், ஊசி குத்தின இடத்துல வலியும் இருந்துச்சு,இப்ப நானும் நார்மலாகிட்டேன். எல்லாரும் அவசியம் தடுப்பூசி போட்டுக்குங்க- உங்களுக்காக, உங்க குடும்பத்துக்காக, நாட்டுக்காக!#GetVaccinated pic.twitter.com/zCXA9pVURq
— Actor Soori (@sooriofficial) May 25, 2021