வவுனியாவில் உள்ள சூரிய மின் உற்பத்தி நிலையத்தில் தீ பரவல்!!
வவுனியா கள்ளிக்குளத்தில் அமைந்துள்ள சூரிய மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று இரவு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு 10 மணியளவில் கள்ளிக்குளத்தில் அமைந்துள்ள சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் நிலையத்திலேயே திடீரென இவ்வாறு தீப்பற்றியது.
இந்த தீப்பரவலின் போது அந்நிலையத்தில் புதிதாக பொருத்துவதற்கென வைக்கப்பட்டிருந்த சூரிய ஒளி மின்உற்பத்தி உபகரணங்கள் தீப்பற்றி எரிந்தன.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர் தீயிணை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
எனினும்,
புதிதாக பொருத்துவதற்கென வைக்கப்பட்டிருந்த சூரிய மின்கலங்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதன்போது,
தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நகரசபையின் தீயணைப்பு பிரிவுடன் காவல்துறை மற்றும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.