பாரிய சவால்களை சந்தித்துள்ள வங்கிகள்!!
இலங்கையின் வங்கிக் கட்டமைப்பு மிகப்பெரிய சவாலுக்கு உள்ளாகியிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
வணிக வங்கி மற்றும் வர்த்தகம் பற்றி ஆய்வுகளை நடத்துகின்ற பிச் ரேட்டிங் (Fitch Ratings) என்ற அமைப்பு தமது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இந்தத் தகவலை இன்று வெளியிட்டுள்ளது.
அந்நிய செலாவணி சரிவை ஈடுசெய்வதற்காக இலங்கை மத்திய வங்கி ஊடாக அரசாங்கம் வெளியிட்டிருக்கின்ற பிணை, முறிகள் மற்றும் வட்டிவீதம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டிருப்பதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2020ஆம் வருட இறுதியில் இலங்கை வங்கிக் கட்டமைப்பிடம் இருந்த சொத்து பெறுமதியில் மூன்றில் ஒருபகுதி அரசாங்கத்திற்குத் திறந்து விடப்பட்டிருப்பதாகவும், அதனால் உள்நாட்டு வங்கிகள் அரசாங்கத்தின் பிணைமுறிகளை கொள்வனவு செய்வதன் ஊடாக, வெளிநாட்டு அந்நிய செலாவணிச் சந்தை திறந்துவிடப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.