“நிராயுதபாணியான எதிர்ப்பாளர்களுக்கு எதிராக மரண சக்தியைப் பயன்படுத்துவது மனசாட்சிக்கு விரோதமானது……” குமார் சங்ககார!!
ரம்புக்கனையில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிசூட்டில் ஒருவர் உயிரிழந்து பலர்காயமடைந்த சம்பவத்திற்கு
சிறிலங்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்டவீரர் குமார் சங்ககார தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
குமார் சங்ககாரவின் Twitter பதிவை பார்வையிட இங்கே அழுத்துக……..
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில்,
நிராயுதபாணியான எதிர்ப்பாளர்களுக்கு எதிராக மரண சக்தியைப் பயன்படுத்துவது மனசாட்சிக்கு விரோதமானது.
மன்னிக்க முடியாதது.
மக்களின் உயிரைப் பாதுகாப்பது காவல்துறையின் முதல் பொறுப்பு.
இது வெட்கக்கேடான கொடூர நிகழ்வு என குறிப்பிட்டுள்ளார்.