5 உயிர் காக்கும் மருந்துகள் உட்பட் 180 அத்தியாவசிய மருந்துகள் இல்லை….. அரசு அதிகாரபூர்வமாக மருத்துவ நெருக்கடி நிலையை அறிவிக்க வேண்டும்!!
தெற்காசிய பிராந்தியத்தில் வலுவான பொது சுகாதார கட்டமைப்பைக் கொண்ட நாடாக இருந்த இலங்கை தற்போது மிக மோசமான சுகாதார நெருக்கடியை சந்தித்துள்ளது.
இதனால்,
அரசாங்கம் அதிகாரபூர்வமாக மருத்துவ நெருக்கடி நிலையை அறிவித்து வெளிநாடுகளின் உதவியை பெறவேண்டுமென இலங்கையில் உள்ள மருத்துவ தொழிற்சங்கங்கள் அவசர கோரிக்கையை விடுத்துள்ளன.
இலங்கையில் நாடளாவிய ரீதியில் உள்ள அரச மருத்துவமனைகளில் 5 உயிர் காக்கும் மருந்துகள் உட்பட் 180 அத்தியாவசிய மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மிகப்பெரிய அவல நிலை மருத்துவமனைகளில் நோயாளர்கள் மரணமடையும் நிலை எழுந்துள்ளது.
இதனால்,
அரசாங்கம் அதிகாரபூர்வமாக மருத்துவ நெருக்கடி நிலையை அறிவிக்க வேண்டுமென மருத்துவ தொழிற்சங்கங்கள் கோரியுள்ளது.
அரசாங்கம் சுகாதார நெருக்கடி நிலை நிலையொன்றை அறிவித்தால் தான் ஏனைய நாடுகளும் அனைத்துலக அமைப்புகளும் உதவிசெய்ய முன்வருமென்பதால் இந்த நகர்வை அவசரமாக மேற்கொள்ளவேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,
கொழும்பின் பிரபலமான சிறார் மருத்துவமனையான லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் சிறார் நீரிழிவு நோயானர்களுக்கு பயன்படுத்தப்படும் விசேட இன்சுலீன் மருந்துக்கு பாரிய தட்டுபாடு காணப்படுவதால் அதனை நன்கொடை செய்ய முன்வருமாறு வைத்தியசாலையின் பணிப்பாளர் இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த மருந்தை பெற்றுக்கொள்வதற்காக சமூக வலைத்தளங்கள் ஊடாக நன்கொடையாளர்களால் நிதி சேகரிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
புலம்பெயர் தமிழ்மக்கள் மற்றும் புலம்பெயர் நாடுகளில் உள்ள இலங்கை பூர்வீக வைத்தியர்களிடமும் மருந்து மற்றும் உபகரணங்களை வாங்க உதவிசெய்யுமாறு இலங்கையில் உள்ள தமிழ் மருத்துவர்கள் பகிரங்க உதவிகளை கோரியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.