இலங்கையால் சமாளிக்கவே முடியாத ஆபத்தான புதிய வைரஸ் – அதிர்ச்சித் தகவல்!!

டெல்டாவினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை அதிகாரிகள் உணர்ந்துகொண்டு  நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் தொடர்ச்சியான முடக்கல்களால் நாட்டின் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படக்கூடிய நிலை உருவாகும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரசிற்கு பின்னர் ஏற்பட்ட பிறழ்வுகள் மிகவும் ஆபத்தானவை என தெரிவித்துள்ள அச்சங்கம் எதிர்காலத்தில் மிகவும் ஆபத்தான மாற்றமடைந்த வகைகள் உருவாகலாம் எனவும் தெரிவித்துள்ளது.

இரண்டு டோஸ்களை செலுத்திக்கொண்ட பின்னரும் பாதிக்கப்படுபவர்கள் உயிரிழப்பவர்கள் குறித்து தகவல்கள் வெளியாகும் காலத்தில் நாங்கள் இருக்கின்றோம் .

நாடு தற்போது மிகவும் ஆபத்தான உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய வலுவான கொரோனா வைரசினை எதிர்கொள்கின்றது.

இதன் காரணமாக நாங்கள் நிலைமையை உணர்ந்து இன்னுமொரு பிறழ்வடைந்த வைரசினை எதிர்கொள்ள தயாராகவேண்டும்.

இன்னுமொரு பிறழ்வடைந்த வைரஸ் ஐந்தாவது அலைக்கு வித்திடலாம்.

இது டெல்டாவை விட ஆபத்தானதாக காணப்படக்கூடும் நாட்டினால் இதனை எதிர்கொள்ள முடியாது எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *