கடதாசி தட்டுப்பாடு காரணமாக மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்ட பரீடசைகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!!
கடதாசி தட்டுப்பாடு காரணமாக மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்ட மேல் மாகாண பாடசாலைகளில் உள்ள 9,10 மற்றும் 11ஆம் தரங்களுக்கான பரீட்சைகளை முன்னர் அறிவிக்கப்பட்ட திகதிகளிலேயே நடத்த முடியும் என மேல் மாகாண கல்வி பணிப்பாளர் சிறிலால் நொனிஸ் (Srila Nonis) தெரிவித்துள்ளார்.
பரீட்சை வினாத்தாள்களை அச்சிடுவதற்கு தேவையான கடதாசி வலயங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
9 மற்றும் 10ஆம் தரங்களுக்கான வினாத்தாள்கள் வலய மட்டத்தில் அச்சிடப்படவுள்ளதுடன்,
11ஆம் தரத்திற்கான வினாத்தாள்கள் மேல் மாகாண திணைக்களத்தில் அச்சிடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி,
முன்னர் தீர்மானிக்கப்பட்ட வகையில், எதிர்வரும் 29ஆம் திகதி தவணை பரீட்சை நடத்தப்படவுள்ளது.
அத்துடன்,
6 ,7 மற்றும் 8ஆம் தரங்களுக்கான தவணை பரீட்சைகள் பாடசாலை மட்டத்தில் நடத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.