இலங்கையில் தங்கத்திற்கு ஏற்பட்டுள்ள நிலை – ஆயிரக்கணக்கானோருக்கு அபாயம்!!
இலங்கையில் தங்க இறக்குமதிக்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருப்பதால் உள்ளூர் சந்தையில் தங்கத்திற்கு கடுமையான பற்றாக்குறை இருப்பதாக அனைத்து நகைக்கடை சங்கம் கூறுகிறது.
தங்கத்திற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் நகை தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளாக தங்க இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தங்க இறக்குமதிக்கான தடை இன்னும் நடைமுறையில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது ஒரு பவுண் தங்கத்தின் விலை சுமார் 116,500 ரூபாயாக உள்ளது. செய்கூலியுடன் ஒரு பவுண் தங்கத்தின் விலை சுமார் 124,000 ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.