சொகுசு வாகன தடைகளிற்கு மத்தியில் கொண்டுவரப்பட்டது 6.5 கோடி பெறுமதியான சொகுசு வாகனம்!!
இலங்கையில் வாகனங்கள் இறக்குமதிக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஜப்பானில் தயாரிக்கப்பட்ட Toyota Land Crusher 300 அதிநவீன கார் ஒன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வந்திறங்கியுள்ளது.
இந்த காரின் மதிப்பு இலங்கையில் சுமார் ஆறரைக்கோடி எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஹம்பாந்தோட்டை துறைமுக அதிகாரி ஒருவர், அமெரிக்கத் தூதரகத்தால் இந்த கார் வரியின்றி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், வாகனங்களின் இறக்குமதியை அரசாங்கம் இடைநிறுத்துவது தூதரகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் தெரிவித்தார்.
அந்த கார் வேறொருவரால் இறக்குமதி செய்யப்படவில்லை என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.