இலங்கையில் சிங்கள மொழியை நீக்கியதா இந்திய உயர்ஸ்தானிகராலயம்??
யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்திலுள்ள பெயர்ப்பலகை தொடர்பில் வெளியான தகவல்கள் உண்மையில்லை என தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தில் உள்ள பெயர்ப் பலகையில் சிங்கள மொழி நீக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
எனினும், உயர்ஸ்தானிகராலயத்தில் உள்ள பெயர் பலகையில் சிங்கள மொழி முன்னரே இடம்பெற்றிருக்கவில்லை என உயர்ஸ்தானிகராலயத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஊடகங்களில் வெளியான தகவல்கள் முற்றிலும் தவறானது என்றும் உயர்ஸ்தானிராலய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதேவேளை, இலங்கையில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திலோ அல்லது உயர்ஸ்தானிகராலயத்திலோ சிங்கள மொழி பயன்படுத்தப்படவில்லை என்று எமது செய்திப் பிரிவுக்கு உயர்ஸ்தானிகாரலயத் தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், இந்திய உயர்ஸ்தானிகராலயம் இவ்வாறு சிங்கள மொழியை புறந்தள்ளியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.