இலங்கையில் ஏற்றப்படும் தடுப்பூசிகளால் வெளிநாடு செல்லத் தடையா?? இராணுவ தளபதியின் விசேட அறிவித்தல்!!
இலங்கையில் எந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டாலும், நீங்கள் எந்த நாடுகளுக்கும் தடையின்றி பயணிக்க முடியும் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இருப்பினும், சில நாடுகளில் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதன் மூலம் நிவாரணம் பெறப்படுகிறது.
அதாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டால் தனிமைப்படுத்தப்படாமல் நேரடியாக அந்த நாடுகளுக்குள் நுழைவதற்கான வாய்ப்பை சில நாடுகள் வழங்குவதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.
இதேவேளை, சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கும், இந்தியாவிற்கும் பயணம் செய்ய முடியாது என்று தகவல் வெளியாகியிருந்தது.
அதேநேரம் பிரான்ஸ் நாடும் இதுபோன்ற அறிவிப்பை அண்மையில் வெளியிட்டிருந்ததாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.
இந்நிலையில் பொது மக்களிடையே சினோபார்ம் தடுப்பூசி ஏற்றிக் கொள்வது தொடர்பில் அச்சம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.