இலங்கை மாணவர்களுக்கு 10 சர்வதேச மொழிகளை கற்பிக்க அரசு முடிவு!!
வீ-மொழி என்ற தொனிப்பொருளின் கீழ், இலங்கை மாணவர்களுக்கு 10 சர்வதேச மொழிகளை கற்பிப்பதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி, ஆரம்ப பாடசாலை, பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்வி சேவை இராஜாங்க அமைச்சு தெரிவிக்கின்றது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இணைய வழியாக இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன்படி,
ஆங்கிலம், பிரன்சு, ஸ்பெயின், ஜேர்மன், இத்தாலி,ஹிந்தி , ரஷ்யா, ஜப்பான், சீன மற்றும் அரபு ஆகிய மொழிகளை பயில்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளதாக அமைச்சு கூறுகின்றது.
சர்வதேச கல்வி நிறுவனத்துடன் இணைந்து, முன்னெடுக்கப்படும் இந்த திட்டம் குறித்து, நாடு முழுவதும் உள்ள பாடசாலை அதிபர்களை தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.