28 வயதுடைய நபர் துப்பாக்கியால் சுட்டு கொலை!!
மாத்தறை – கொஸ்கொட பகுதியில் நபரொருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி இன்று உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
28 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இதேவேளை, உயிரிழந்த நபர் தொடர்பில் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என்பதோடு,
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.