இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தனது பதவியிலிருந்து ராஜினாமா!!
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான ரொஷான் ரணசிங்க தனது இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்தும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்ட அமைப்பாளர் பதவியிலிருந்தும் இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தனது பதவி விலகல் தொடர்பாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு விரிவான கடிதம் ஒன்றையும் அவர் அனுப்பி வைத்துள்ளார்.
கடந்த பருவத்தில் இயற்கை உரங்களை பயன்படுத்தியதால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அரச தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.