இலங்கையில் 7ஆக அதிகரித்த ஒமிக்ரோன் தொற்றாளர்கள்!!

நாட்டில் ஒமைக்ரோன் திரிபுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

சூடானில் இருந்து வந்த இருவரும், தன்சானியாவில் இருந்து வந்த ஒருவருமாக 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்கனவே,

4 பேர் ஒமைக்ரோன் திரிபுடன் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

அவர்களில் ஒருவர் நாட்டை விட்டு வெளியேறியதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *