தனியார் பேருந்துகளில் நவீன முறையொன்றில் கட்டணம் செலுத்தும் வசதி!!

தனியார் பேருந்துகளில் கட்டணம் செலுத்தும் நவீன முறைமையொன்றை அறிமுகப்படுத்துவதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கையடக்கத் தொலைபேசியின் ஊடாக,

கியூஆர் குறியீட்டு (QR CODE) நடைமுறை புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக கட்டணம் செலுத்தும் திட்டத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன (Gemunu Wijeratne) தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில்,

அட்டை முறைமை மற்றும் QR CODE எதிர்வரும் 24ம் திகதி முதல் புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக கட்டணம் செலுத்துவதற்கு  திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாகவும்,

விரைவில் அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்வதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இதன்படி,

163 இலக்க பேருந்து மார்க்கமான தெஹிவளை – பத்தரமுல்ல மார்க்கத்தின் பயணிக்கும் ஒரு பேருந்தில் இதனை முதல் கட்டமாக நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மாத இறுதியில் முற்கொடுப்பனவு அட்டை (prepaid card) முறையில் கட்டணங்களை செலுத்தும் முறை ஆரம்பிக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *