கிடைத்தது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் தீர்மானத்திற்கான அங்கீகாரம்!!
பொது இடங்களில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் தீர்மானத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) தெரிவித்துள்ளார்.
மேலும், கொள்கை முடிவுகளின் அடிப்படையில் இந்த அட்டை கட்டாயமாக்கப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
எந்த இடங்களில் தடுப்பூசி அட்டை கட்டாயம் என்பதை அமைச்சு எதிர்காலத்தில் முடிவு செய்யும்.
கையடக்கத் தொலைபேசி விண்ணப்பம் மற்றும் முழுமையான தடுப்பூசி நிலைக்கான QR குறியீடு என்பன 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் திகதி உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படும் என தொழில்நுட்ப அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும், அந்த நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் தீர்மானம் அமுல்ப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்